மகிழ்கின்றோம்☺️ நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகின்றோம்🙏🏻 இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு வாசித்தல் சுவாசித்தலாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.சிறந்த வாசிப்பு மாணவர்களுடைய உன்னத நிலையை அடையச் செய்வதற்கு உதவும் வகையில் செயல்படும். நாமக்கல்லைச் சார்ந்த "விதை" சிறார் வாசிப்பு இயக்ககம் நமது அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு காலைக்கதிரின் மாணவர் பதிப்பான பட்டம் 100 பிரதிகளை வழங்கியிருந்தனர்.அதன் வாசிப்பு துவக்க விழாவை தலைமையாசிரியர் சாகுல் அமீது துவக்கி வைக்க வாழ்த்துரைகளை ராபியா பஸரி, காயத்ரி, ரொகையா பீவி ஆகியோர் வழங்கினர். வாசித்தலின் சிறப்பை பள்ளியின் முன்னாள் மாணவர் பள்ளி தூதுவர் ஷிப்ல் ஹூசைன் சிறப்புரையாற்றினார் .நன்றி உரையை மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு வழங்கினார். வாசிப்புத்திறன் மேம்பட தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக பட்டம் இதழ்களை வழங்கிய "விதை" செந்தில் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
வணக்கம் ஐயா. தங்களின் சேவை மிகுந்த மகிழ்ச்சி கொள்ள செய்கிறது. தாங்கள் அரசு பள்ளி மாணவர்களின் மீது காட்டும் அன்பு அளப்பரியது. கடந்த முறை பொம்மி, சின்ன யானை போன்ற சிறார் இதழ்களையும் வழங்கி இருந்தீர்கள். இந்த முறை பட்டம் இதழ்களை மட்டுமே வழங்கியிருக்கிறீர்கள். தொடர்ந்து எம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தாங்களும் தங்கள் அமைப்பும் தரும் ஊக்கம் ,மிகுந்த மகிழ்வினை தருகிறது. தங்களின் ஊக்கச் செயல்பாடுகள் தொடர்ந்து தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கும் தங்கள் அமைப்பினருக்கும் இதயங்கனிந்த கனிந்த நன்றிகள்🙏🌹
மு. சாகுல் அமீது,
தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம் 9944115724
99441 15724

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment